ஏப்ரல் 2ம் தேதியன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்

கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1337  மையங்களும், நகர்ப்புறங்களில் 244 மையங்களும் என 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 5 வயதிற்கு உட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1357 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6324 பணியாளர்கள் பணியாற்றவுள்ளார். இப்பணிகளை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 2 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கலாம். இதன் இரண்டாம் தவணையாக ஏப்ரல் 30 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...