பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா-வெள்ளித் தேரில் அம்மன் பவனி

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். முக்கிய நிகழ்வான வெள்ளித்தேரில் மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இருந்து இன்று முக்கிய வீதிகள் வழியாக செல்லும் தேரானது வெங்கட்ரமன் வீதியில் நிலைநிறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை கோவிலை வந்தடையும். இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...