பொள்ளாச்சியில் போக்சோவில் கைதான நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை – நீதிபதி தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராஜா என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவு பெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராஜாவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...