நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை – கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் பேசியாதவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவு வரும் போது பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

குடிநீருக்காக சாலைகள் தோண்டப்படும் நிலையில் அதை சரி செய்வதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த பணிகளும் துவக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் இதே போன்று பணிகள் நடைபெறுகிறது.

கோவை மாநிலத்தில் மிக அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அரசியல் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடைகாலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அணைகளில் தண்ணீர் குறைகிற போது மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என்பது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேறு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது எதிர்ப்பு வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் தருவது அத்தியாவசியம் என்ற காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.



பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதை கொடுத்தால் பொதுமக்கள் நம்புவார்கள். அதை இன்னும் தரவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை இங்கே வந்து பேசுவது பிரதம அமைச்சர் அளவில் இதுபோன்று நாம் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு நேரடியாக வந்து இல்லாத குற்றச்சாட்டுகளை அவ்வளவு நாகரிகமானது அல்ல.

அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் கூறுவதும் நாகரீகம் அல்ல. பிரதமர் மோடி அதை அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு பேசியிருக்கக் கூடாது- திமுக கொள்ளை அடித்த பணத்தை மக்களிடத்திலேயே ஒப்படைப்போம் என நேற்று பிரதமர் பேசியது தொடர்பாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பாதிப்புகளை எல்லாம் எதிர்நோக்கி தான் திமுக இருக்கிறது. திமுக எதற்கும் சலித்து போனது இல்லை.

மக்களுக்கு கடுமையாக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டங்களை முதல்வர் தந்திருக்கிறார்.

இதற்கு மேல் வேறு யாரானும் செய்திருக்கிறார்கள் அல்லது அருகில் உள்ள மாநிலங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் சொல்லட்டும். மக்களே சொல்லட்டும். கோவையில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, தோழமைக் கட்சிகளுடன் தலைமை பேசி வருகிறது. தோழமைக் கட்சிகளின் மற்றும் எங்கள் தலைமை சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை உண்டு. அதற்காக கூட்டணியில் சென்றால் உடன்பாட்டில் செல்வது அவ்வாறு சென்றால் 100% இன்று வெற்றி பெறச் செய்ய உழைப்பாளர்கள்.

தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நாங்கள் அமல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...