தாராபுரம் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழாவை நகர திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் அண்ணா சிலை அருகே திமுக கட்சி சின்னம் பதிக்கப்பட்ட 71 கிலோ கேக் வெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.



இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை வழங்கி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதற்கு முன்னதாக அண்ணா சிலை முன்பு 70 அடி திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் தவச்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன்,தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அபிராமி கார்த்தி, ஹைடெக் அன்பழகன், சாஜிதா பானு, ராஜேந்திரன், முத்துலட்சுமி, பிலோமினா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...