கோவை கொடிசியாவில் கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 98 பதக்கங்களை தமிழ்நாடு பெற்று இரண்டாம் இடம் வந்தது. அடுத்த முறை முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


கோவை: கோவை கொடிசியா அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் 228 ஊராட்சி மன்றங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள 12600 ஊராட்சிகளுக்கு 33 வகையான உபகரணங்கள் 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் சிறப்பாக பயிற்சி செய்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும். இந்திய ஒன்றியம் திரும்பி பார்க்கும் வகையில் விளையாட்டு துறை சார்ந்து முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.



கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 98 பதக்கங்களை தமிழ்நாடு பெற்று இரண்டாம் இடம் வந்தது. அடுத்த முறை முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டு துறைக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி துறைக்கு 44 ஆயிரம் கோடியும், விளையாட்டு துறைக்கு 440 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகனின் துறைக்கு தந்தை குறைவாக தான் நிதி ஒதுக்கியுள்ளார். தந்தை தரவில்லை. நண்பர் நீங்கள் தரலாம். விளையாட்டு வகுப்புகளை வாங்கி கணிதம், அறிவியல் பாடம் எடுக்காமல் ஆசிரியர்கள் விளையாட விட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு 6 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி ஆரோக்கியம், புத்துணர்சி உடன் இருக்க வேண்டும். கலைஞருக்கு அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டிற்கும், கலைஞருக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு சந்தேகம் உண்டு. கலைஞர் சிறு வயதிலேயே களத்தில் இறங்கி விளையாடியவர்.



பின்னர் அரசியல் களத்திலும் விளையாடியவர். கலைஞர் ஒரு ஆர்வம் மிக்க விளையாட்டு வீரர். கலைஞர் எனர்ஜி உடன் வேறு ஒருவரின் எனர்ஜியை ஒப்பிட்டு பார்க்க முடியாது. வசதிகள் இல்லாத காலத்தில் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தார். அரசியல், சினிமா, இலக்கியத்தில் ஒரே நேரத்தில் கொடி கட்டி பறந்தவர். கலைஞரின் எனர்ஜி, உழைப்பு விளையாட்டு வீரர்களுக்கு வர வேண்டும். உழைத்து கொண்டிருந்தால் வெற்றி தேடி வரும் என உழைத்து கொண்டிருந்தார்.

நல்ல டீம் அமைந்தாலே, பாதி வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம். அதனால் தான் எப்போதும் வீழ்த்த முடியாத விளையாட்டு வீரராக கலைஞர் இருந்தார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டியது நமது பொறுப்பு. விளையாட்டு மட்டுமின்றி நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெற உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது குறித்த கேள்விக்கு, “அப்படி சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள்” என பதிலளித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...