பொள்ளாச்சி- கோவை சாலையில் தனியார் பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

இன்று காலை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட கலைமகள் என்ற தனியார் பேருந்தில் கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கானமாணவர்கள்தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இன்று காலை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட கலைமகள் என்ற தனியார் பேருந்தில் கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

இந்த பேருந்துக்கு பின்னால் காரில் வந்த நபர் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதை கண்ட அவர் தனது மொபைல் போனில் படம் பிடித்படி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது அவர் பேருந்தை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகத்துடன் சென்றார். காட்சிகளை பதிவு செய்த நபர் கூறுகையில், பொள்ளாச்சி கோவை சிலையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பொறுப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மாணவர்களை படியில் தொங்கியபடி அழைத்து செல்வது மிகவும் ஆபத்தான ஒரு செயல்.நாள்தோறும் விபத்துகளை அதிகளவில் சந்திக்கிறோம். பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது. எனவே உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...