வரும் 10ம் தேதி முதல் அடையாள வேலை நிறுத்தம்- கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அறிவிப்பு

பழைய விலையில் திட்ட பணிகளை செய்தால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைமை இருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வை schedule of rates ல் force' majeure clause என்ற பிரிவின் கீழ் விலை திருத்தம் செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் உதயகுமார், செயலாளரும் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனருமான சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பணிகளை வேகமாக செய்து வருகிறார்கள். தற்போது ஜல்லி, எம் சாண்ட், ப்ளூ மெட்டல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையை விட 30 சதவீதம் கூடுதலாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது.

பழைய விலையில் திட்ட பணிகளை செய்தால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைமை இருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வை schedule of rates ல் force' majeure clause என்ற பிரிவின் கீழ் விலை திருத்தம் செய்ய வேண்டும். நடப்பாண்டிற்கான செட்டியூல் ஆப் ரேட் அரசு தயாரிக்கும் போது ஜல்லி, ப்ளூ மெட்டல் போன்றவற்றின் விலையை 10 சதவீதம் விலையேற்ற கட்டணம் என்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தற்போது நெடுஞ்சாலை துறையினர் ஜல்லி, எம் சாண்ட், ப்ளூ மெட்டல் விலை ஏற்றத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள். கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் தேர்தல் நேரத்தில் முக்கிய திட்ட பணிகளை முடித்து தர வேண்டி இருப்பதால் ஸ்ட்ரைக்கை தள்ளி வைத்திருந்தோம்.

கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றும் பணிகள் தவிர்த்து மற்ற பணிகளை நிறுத்தி வரும் மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.‌ ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றின் மார்க்கெட் விலையில் செட்டியூல் ஆப் ரேட் மாற்றி உரிய விலை ஏற்றம் செய்து தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...