தேர்தல் பத்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு - கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்பு

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடியை பாஜக திரும்பக் கொடுக்க வேண்டும். நீதிமன்றம் அறிவித்த தேதிக்குள் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நிதியை திரும்பி கொடுக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.


கோவை: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதை அடுத்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று (பிப்.15) கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கார்ப்பரேட் நிறுவனங்களின் லஞ்சம், முறைகேடான நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று வரும் அரசியல் கட்சிகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மறுத்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடியை பாஜக திரும்பக் கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் 5 அமர்வு கொண்ட நீதிபதிகள் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நீதிமன்றம் அறிவித்த தேதிக்குள் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நிதியை திரும்பி கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கனகராஜ், அஜய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...