சரவணம்பட்டியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி வழங்கப்படும் என கூறி ஆட்களை அழைத்து வந்து ஏமாற்றியதாக 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்ததுடன், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய நிலையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி ஆகியவை அமைச்சர் கையால் வழங்கப்படும் எனக் கூறி மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.



ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு பட்டா மற்றும் சாவி ஆகியவை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அழைத்து வரும்பொழுது வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்த அதிகாரிகள், நிகழ்ச்சி முடிந்த பிறகு தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகமும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பு,...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துண...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையில் தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. திரும...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிக...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...