கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி என்ற மாணவன், காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல் வந்தார்.


கோவை: கோவை வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 - 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக இருந்து படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்ததும் பலரது முகத்திலும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், பூரிப்பும் காணப்பட்டது. ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டு அடையாளத்தை, நட்புகளை பாசத்தோடு புதுப்பித்துக் கொண்டனர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி என்ற கூடலூரை சேர்ந்த மாணவன், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக அன்றைய காலகட்ட பள்ளி சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடையில் அமர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும், கோவை கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டி தற்பொழுது இருக்கக்கூடிய காலச் சூழ்நிலைக்கேற்ப விழுப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும், மேலும் இது போன்ற மாணவர்கள் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நல பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவில் நின்ற நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டும், பல்வேறு நற்செயல்களையும் பாராட்டி பேசினார்கள்.

மேலும் மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்துகொள்ள வேண்டும். என்று உணர்வு பூர்வமாகவும் பேசி முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...