செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி இலவச கல்வி எனக் கூறி அதிக பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார்

பணம் வசூலிப்பதை கேட்டால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு தனியார் பள்ளி நிர்வாகம் கூறுவதாக புகார் கூறிய பெற்றோர்கள் இதுகுறித்து, குழந்தைகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும், இதனைக் கேட்க போனால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.01) மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், ஆரம்பத்தில் பள்ளியில் இலவச கல்வி தருவதாக கூறி உறுதியளித்ததன் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், அப்போது 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்பட்ட நிலையில் பின்பு 300, 600, 900 என 1800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததாகவும், 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளனர்.

மேலும் 2024-25ம் கல்வியாண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை என கூறி குறைந்தபட்சம் 30,000 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை கல்வி கட்டணம் கேட்பதாகவும் கட்டணத்தைச் செலுத்த இயலாவிட்டால் பள்ளியில் இருந்து TC யை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளி FCRA வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ள பெற்றோர்கள், இந்த பள்ளியின் கட்டண பில்லில் பள்ளி கட்டணம் 100 ரூபாய் என்று இருக்கும் நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் இந்த பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர் சொர்ணலதாவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். மனு அளிக்க வந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...