கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரபரல ஸ்டோரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

முக்கிய கட்சிகளின் கொடிகள், கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் பொறித்த கொடிகள், கட்சி மோதிரங்கள், கையில் கட்டும் பேண்டுகள், தொப்பிகள் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இனிவரும் நாட்களில் பிரச்சாரம், பொதுகூட்டம், கட்சி பேரணிகள், தெருமுனை பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கிவிடும்.



அதே சமயம் அந்தந்த கட்சி அலுவலகங்கள், பிரச்சாரம் நடைபெறும் இடங்கள், பேரணி நடைபெறும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் அந்தந்த கட்சி கொடிகள் அதிகளவு காணப்படும். இந்நிலையில் கோவையில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி உள்ளது.



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரபல காந்திஜீ கதர் ஸ்டோரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடுகளாக முக்கிய கட்சிகளின் கொடிகள், கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள், கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் பொறித்த கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து கொடி தயாரிப்பாளர்கள் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் கொடிகளையும், கட்சித் தலைவர்கள் கட்சியின் சின்னங்கள் பொறித்த கொடிகளையும் தயாரித்து வைத்து கொள்வோம். கட்சி கூட்டணிகள் முடிவான பின்பு அதற்கு தகுந்தாற்போலும் கொடிகளையும் தயாரிக்க துவங்கி விடுவோம் என தெரிவித்தனர்.



மேலும் இங்கு கட்சி மோதிரங்கள், கையில் கட்டும் பேண்டுகள், தொப்பிகளும் கிடைக்கும் என கூறினர். இங்கு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று தேசிய கொடி அதிகளவு தயாரிக்கப்படும் என்பதும், கோவில் விழாகளுக்கும் கொடிகள் தயாரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...