கோவை மண்டலம் சார்பில் துடியலூரில் நடைபெற்ற 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம்

கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை துடியலூரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் கோவை மண்டலம் சார்பில் 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் தங்கசாமி என்கிற திருவேல் முருகன், மாநில செயலாளர்கள் சின்னதுரை, கூடல் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகர்கள் பாதுகாப்பு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் 5 சதவீதம் வரை வரி விதிக்கவும், உணவுப் பொருளுக்கு அறவே வரி விலக்கு அளித்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி பொருள்களுக்கு குறைந்த அளவில் வரிவிதிப்பும், இறக்குமதி பொருள்களுக்கு அதிக அளவில் வரிவிதிப்பும் விதிக்கப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கு முழு அளவில் ஊக்கம் கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி எண் எடுத்து வணிகம் செய்யக்கூடிய வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். சிறிய சுதேசி வணிகர்களுக்கு கார்ப்பரேஷன் லைசன்ஸ், பஞ்சாயத்து லைசன்ஸ், தொழில் வரி கட்டி வணிகம் செய்யக்கூடியவர்களுக்கு 25 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அய்யனார் ராஜ், பாஸ்கர், சேர்மகனி, ஆத்திச் செல்வன், மகாராஜன், வேதநாயகம், மணி உட்பட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர். இறுதியில் குமாரவேல் நன்றி கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...