கோவையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் 47 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இன்று (30.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் மேயர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 47 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 12 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 9 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 6 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 7 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 7 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 6 மனுக்களும் ஆகமொத்தம் 47 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) மு.நூர் அகமது, உதவி ஆணையர் (கணக்கு) மாணிக்கம், நகர்நல அலுவலர்(பொ) மரு.வசந்த் திவாகர், நகரமைப்பு அலுவலர் குமார், செந்தில்குமரன்(மத்தியம்), கவிதா(கிழக்கு), உதவி ஆணையர்கள் சந்தியா(மேற்கு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...