டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது - கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது என தெரிவித்தார்.

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாளைய தினம் ஒரு முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார் என்றார்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாகவும், இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு எண்ணம் தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய பிரஜையும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாடை தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், இதில் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

நாளை பிரதமர் வருகிறார், தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என சாடினார். கோவையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டுள்ளது குறித்தான கேள்விக்கு அதைப்பற்றி பிறகு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...