ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை எனவும், இந்த இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் அதே வேளையில் ஓருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கவும் வாய்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட்வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை  திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பவானி ஆற்றின்  குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு  கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும்  என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை என்று தெரித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனிமேல் வருகின்ற பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமானது சபையில் இருக்கும் உறுப்பினர்களை பொறுத்து அமையும் எனவும் ஜி.கே.வாசன் தெரித்தார். மேலு, இனிமேல் தன்னுடைய கூட்டங்கள் பட்டாசு வெடித்தல், சால்வை, பொன்னாடை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...