வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Coimbatore: 

வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை, ஜனவரி 17, 2024: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.





வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு செல்வகுமார் என்பவர் இயக்கி வந்த பேருந்து, வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளும் மாலை 5.50 மணியளவில் பெட்ரோல் பங்க் பகுதியில் நேருக்கு நேர் மோதின.

இதில், வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து மிகவும் பழமையானது மற்றும் பிரேக் பிடிக்காததால், பேருந்தை நிறுத்துவதற்காக அங்குமிங்கும் சாலையில் இடித்துக் கொண்டு வந்தது. அப்போது, சாலையின் ஓரம் நின்ற டாடா சுமோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை இடித்து, எதிரே வந்த பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், சாலைகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...