கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன

மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் நேற்று (ஜன.15) காலை 10 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.ஐயப்பன், கமிட்டி தலைவர் கே.சி.எஸ். காஜா, கௌரவ தலைவர்கள் எம்.பி. மைதீன், ஏ.ரங்கநாதன், ஏ.எஸ்.ஜே. ஜாபர், தாமரை ஜாபர், உதவி செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஷாஜகான், எஸ்.ஷாஜகான், ஜெ.ஜெயகுமார் மற்றும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...