திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பவளக்கொடி கும்மி குழுவினரின் சார்பில் கடந்த 15 நாட்களாக கும்மி நடனம் பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பவளக்கொடி கும்மி குழுவினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கும்மி ஆடி அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.


திருப்பூர்: பொங்கல் விழா இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளைய தினம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் இன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.



பாரம்பரிய முறைப்படி விறகு மூட்டி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூச்சலிட்டு பொங்கல் வைத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இதனை தொடர்ந்து பவளக்கொடி கும்மி குழுவினரின் சார்பில் கடந்த 15 நாட்களாக கும்மி நடனம் பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பவளக்கொடி கும்மி குழுவினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கும்மி ஆடி அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு தமிழர்கள் பாரம்பரிய கலை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் மரபு மாறி வரக்கூடிய சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...