சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும், பணிமனை முன்பு சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று முதல் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை-திருச்சி சாலை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பினர் இணைந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும், பணிமனை முன்பாகவே சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.



காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியபோதும், அதனை ஏற்காத தொழிற்சங்கத்தினர் அதே பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Newsletter

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...