முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி - பொள்ளாச்சி ஒன்றிய கூட்டத்தில் புகார்

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.



இதில் கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஆச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சியில் வசிக்கும் 11 பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் பெயர் பட்டியல் அனுப்பியது.

ஆனால் அந்த பட்டியலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து மாலினி கூறும் போது தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்ட பட்டியலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.



மாவட்ட நிர்வாகம் அனுப்பிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது நலத்திட்ட உதவிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்கள். இது வேதனையாக உள்ளது. முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பயனாளிகளை அதிகாரிகள் முறையாக தேர்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....