தடாகம் அருகே வீட்டின் முன்பு உணவுப்பொருட்களை சாப்பிடும் யானைகளின் வீடியோ வெளியீடு

வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு காட்டு யானைகள் தோட்டத்து வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு, அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு சென்றுள்ளன.


கோவை: கோவை தடாகம் அருகே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி செல்லும் காட்டுயானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.



இந்நிலையில் தடாகம் அருகே வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு காட்டு யானைகள் தோட்டத்து வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளன.



பின்னர் அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை பயிரை சாப்பிட்டதுடன் சேதப்படுத்தி சென்றுள்ளன.



இவை அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காட்டுயானைகள் தினமும் அப்பகுதியில் சுற்றி திரிந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்வதால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...