குறை கூற வந்த மக்களை தடுத்து திருப்பி அனுப்பிய திமுகவினர் - பல்லடத்தில் நகராட்சியில் பரபரப்பு

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தலைவர்களின் கணவர்களின் தலையீடு இருக்கக் கூடாது பெண்கள் சுதந்திரமாக மக்கள் பணி செய்ய வேண்டும் அவர்களுக்கான திறமை உள்ளது என பொது மக்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் பகுதியில் சாக்கடையின்றி மழை நீர் சேகரிப்பு தொட்டி போல அந்தந்த பகுதி மக்கள் அவரவர்கள் வீட்டின் முன்பு சாக்கடை சேகரிப்பு தொட்டியை பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், அன்றாடம் இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீர் செல்வதாகவும் இதனால் பெரும் அவதிப்படுவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் அதை நிறைவேற்றி தர இல்லை என்றும் இதனை கண்டித்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் மக்கள் மனு பெரும் இடத்தில் திமுக நிர்வாகிகள் ரத்தினசாமி மற்றும் மதினாபாய் மற்றும் சிலர் அமர்ந்து கொண்டு கேலி கிண்டல்கள் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது தலைவரை சந்திப்பதற்காக பொதுமக்கள் வந்த போது அதற்கான பதிலை அரசு அலுவலர்கள் யாரேனும் தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் மக்களை திமுகவினர் தடுத்து தலைவர் சொந்த வேலையாக வெளியில் இருப்பதாகவும் நாளை வந்து விடுவார்கள் என்றும் மேலும் பேட்டி எல்லாம் கொடுத்தால் காரியம் நடத்தி விடுவீர்களா? என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசிவிட்டு கவுன்சிலர் காங்கிரஸை சேர்ந்த நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி என்பவரை நகராட்சி அலுவலகத்திலேயே அனைவர் முன்பும் கடுமையாக மிரட்டல் விடுத்தனர் திமுகவினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து செய்தியாளர்களும் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர், அப்போது எங்களை மீறி எங்களை எதிர்த்து செய்தி எடுக்கிறீர்களா? போடுங்கள் பார்க்கலாம் என்று மிரட்டல் விடுத்து நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்றும் அனைவரையும் தரக்குறைவாக கோபத்தில் பதற்றத்தில் நடுக்கத்துடன் ரத்தினசாமி என்ற திமுகவை சேர்ந்தவர் ஆவேசமாக பேசினார், அப்போது மயங்கி விடுவாரே? என அவரை சிலர் அமைதியாக தெரிவித்தனர் இருப்பினும் தனுக்குத்தானே செய்தியாளரையும் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.



இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திமுகவினரை அவர்களை கேட்கும் ரோஷம் எங்க பிரச்சினையை தீர்த்துவைப்பதில் காட்டுங்கள் என கடுமையாக சாடி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கப் சுப் ஆக அனைவரும் ஆகினர். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தலைவர்களின் கணவர்களின் தலையீடு இருக்கக் கூடாது பெண்கள் சுதந்திரமாக மக்கள் பணி செய்ய வேண்டும் அவர்களுக்கான திறமை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே பெண்கள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு தலைவர்கள் உள்ளனர்.

திருச்சி மாநாட்டிலேயே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைவர்கள் அவர்களது கணவர்களின் தலையீடு பொதுமக்கள் பணியில் அரசு அலுவலகங்களில் இருக்குமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார், அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல் நான்தான் தலைவர் என்று நகர செயலாளர் ராஜேந்திர குமார் பல்லடம் நகராட்சி அலுவலர்களையும் மற்றும் தன்னை தலைவர் என்று கூறுபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து தற்போது இப்பகுதியில் தனக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பழிவாங்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர தலைவர் கூட்டணி கட்சியினுடைய கவுன்சிலருமான ஈஸ்வரமூர்த்தி என்பவரை அலுவலகத்திற்குள் வைத்தே அவருக்கும் மிரட்டல் விடுத்து பொதுமக்களுக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் இப்பகுதியில் அரங்கேறியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...