தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் - கோவை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடலூர் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பட்டு தப்பித்துச் சென்றனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., மாநகர் மற்றும் மாவட்ட பிரிவுகள், நுண்ணறிவுபிரிவு, ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ பிராஞ்ச், மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு, 14 செக்போஸ்ட்களில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு செக்போஸ்டில் செல்லக்கூடிய வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படும். அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளை முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...