பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி பாப்பம்பட்டி தி மு க ஒன்றிய துணை செயலாளர் பி.ஆர்.பரமசிவம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.

இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.

இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...