வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை - பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அச்சம்

பச்சை மலை எஸ்டேட் அருகே யானைகள் நடமாட்டம் உள்ள நகராட்சி பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.



பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...