திருப்பூரில் அரச பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி - மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த உயிர்காக்கும் நீச்சல் இலவச பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் 20 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் இலவசமாக நீச்சல் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.



வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிகள் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவு அனைத்தையும் ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள்வதோடு ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதி பெரும் மாணவர்களை மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

மேலும் நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் நீச்சல் பழகியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர்களையும் நீச்சலில் பழக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...