கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது

சிறப்பு பென்சன் உயர்த்தி வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு பென்சன் 6750 ரூபாய் வழங்கிட வேண்டும், அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...