ரூ. 7.40 லட்சம் மோசடி - மெக்கானிக் கடை உரிமையாளர் கைது

சொகுசுகாரில் மாற்றம் செய்து தருவதாக கூறி மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: ரூ.7.40 லட்சம் பண மோசடி செய்தவரை கோவை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்மணி (வயது 45). இவரது நண்பர் ஒருவர் சொகுசு கார் ஒன்றை கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக அதில் சில மாற்றங்கள் செய்து தருமாறு கூறினார். இதனையடுத்து அருண்மணி ஆன்லைன் மூலமாக கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தில் உள்ள ஓர்க் ஷாப் இருப்பதை பார்த்தார்.

இதையடுத்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபால் (43) என்பவரை தொடர்பு கொண்டு, சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு, கார் மற்றும் ரூ.2.50 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.

தொடர்ந்து மேலும் பல்வேறு தவணைகளாக ரூ.4.90 லட்சம் என, மொத்தம், ரூ.7.40 லட்சம் பணத்தை கோபாலிடம் கொடுத்தார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர் குறித்த காலத்தில், காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டார். இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...