கோவையில் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோவை வருகை!

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கொடிசியா அரங்கில் இன்று காலை நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டத்திற்கான 8031 வளர்ச்சிப் பணிகளாக ரூ.1313 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், 6200 பயனாளிகளுக்கு ரூ.12.12 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6200 பணிகள் ரூ.1047.56 கோடி மதிப்பிலும், ஈரோடு மாவட்டத்தில் 361 பணிகள் ரூ.108.21 கோடி மதிப்பிலும், திருப்பூர் மாவட்டத்தில் 815பணிகள் ரூ.89.45 கோடி மதிப்பிலும், ஊட்டி மாவட்டத்தில் 229 பணிகள் ரூ.67.98 கோடி மதிப்பிலும் என மொத்தம் 8031 பணிகள், ரூ.1313.2 கோடி மதிப்பில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், சிறப்பிக்க உள்ளார்கள். 

முன்னதாக, ரூ.20.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைக்கவும் உள்ளார்கள். 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், சட்டப்பேரவத்துணைத் தலைவர், முதன்மை செயலர்கள், பொதுப்பணித்துறை செயலர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...