மேட்டுபாளையத்தில் சிறுத்தை கடித்து ஆடு பலி - பொது மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதில் காயமடைந்த ஆடு ஒன்று உயிரழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது


கோவை: தோட்டத்தில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்து கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பூதப்பள்ளம் அடர்ந்த வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான், காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

மேட்டுப்பாளையம் வனத்துறைக்குட்பட்ட நெல்லித்துறை பூதப்பள்ளம் சுப்பிரமணியன் என்பவர் தோட்டத்தில் நேற்று 5 ஆடுகள் கட்டப்பட்டிருந்தது.

அதில் ஒரு ஆட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றுள்ளது. அப்போது அங்கு நின்ற மற்றொரு ஆண்டின் கழுத்தையும் கடித்துள்ளது. இதனிடையே ஆட்டின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது சிறுத்தை ஆட்டை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவர சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன. இதோடு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...