சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் சாகசம் - மாணவர்கள் கண்டுகளிப்பு

கோவை சூலூர் விமான படைத்தளத்தில் நடந்த போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை அருகே சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் சாகசம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.குறிப்பாக தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் விமானப்படையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்வை நேரில் கண்டு களித்த மாணவ மாணவிகள் கூறுகையில், விமானங்களை அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது புதியஅனுபவமாக இருந்தது. போர் விமானங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தோம்.

இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை அறிய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. இது விமானப்படையில் சேர எங்களுக்கு உத்வேகம் அளித்தது என தெரிவித்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...