திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்எட்டில் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆயுதபூஜை பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தொழில் நகரம் என்பதால் ஆயுதபூஜை பண்டிகையானது விமரிசையாக கொண்டாடப்படும்.



இந்நிலையில் ஆயுத பூஜைக்கு முக்கிய தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



ஆயுத பூஜையால் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.



மேலும் பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பூ மார்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...