பண்டிகை நாட்களை முன்னிட்டு கோவையில் இருந்து 220 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பண்டிகை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான அறிக்கையில்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட். சார்பில் வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை-காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு 70 பேருந்துகள், உதகைக்கு 20 பேருந்துகள், சிங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு 50 பேருந்துகள், திருச்சிக்கு 50 பேருந்துகள், தேனிக்கு 20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தேவைப்படும் போது கூடுதலாக பொது மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் விடுமுறை முடிந்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் ஊர்களிலிருந்து திரும்பி வர ஏதுவான வகையில் மேற்படி ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...