உடுமலை கால்நடை மருத்துவ பல்கலை.யில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒருங்கிணைந்த கோழி சுகாதாரம் மூலம் நீடித்த நிலையான கோழி உற்பத்தி" என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை பேட்டை அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் UKRI – GCRF நிதியுதவிடன் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோழி சுகாதார மைய திட்டதின் மூலம் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒருங்கிணைந்த கோழி சுகாதாரம் மூலம் நீடித்த நிலையான கோழி உற்பத்தி" என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியை உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் இத்திட்ட முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் பா.குமாரவேல் தலைமை வகித்து நடத்தி திட்ட செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் பற்றி விவரித்தார்.

லண்டனின் ராயல் கால்நடை கல்லூரியின் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குநர் முனைவர் பியானோ டாம்லி இணையதளம் மூலம் திட்ட விளக்கவுரையை வழங்கினார். உடுமலைப்பேட்டை சுகுணா கோழியின மேலாண்மை நிறுவனத்தின் முதல்வர் முனைவர் கு.மணி கோழி உற்பத்தியில் உயிர் பாதுகாப்பு என்ற குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி சக்தி சுகர்ஸ் சோயா பிரிவின் முதுநிலை பொது மேலாளர் இரா.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பொ.சாமுவேல் மாசிலாமணி ரொனால்டு கருத்தரங்கு அறிமுகவுரை ஆற்றினார்.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை ஒட்டுண்ணியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் முனைவர் க. செந்தில்வேல் வரவேற்புரையாற்றினார். தேனி விவசாயிகள் பயிற்சி மையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் முனைவர் ந. விமல் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.

இந்த பயிலரங்கில் கோழிப் பண்ணை பங்குதாரர்களான கோழி பண்ணையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்முனைவோர். கோழிப் பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றனர். கோழி உற்பத்தியில் தீவனத்தின் முக்கியத்துவம், நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக்கும் ஒருங்கிணைந்த சுகாதார முறை, உணவு மூலம் பரவும் நோய்க்கிருமிகள், மதிப்பு கூட்டல் மற்றும் ஆராய்ச்சி வழிகள் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவுரைகள் பல்வேறு நிறுவன நிபுணர்களால்

வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோழிப் பண்ணை பங்குதாரர்களுக்கு இடையே கோழிப்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கோழிப் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி வளாகத்தில் கோழிப்பண்ணை உபகரணங்கள், கோழித் தீவன சேர்வைகள், கோழிகளுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது இதனை 121கோழிப்பண்ணையாளர்கள், 34 பங்குதாரர்கள், 53 மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பார்வையிட்டதுடன் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான பண்ணையாளர்கள் வல்லுநர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...