கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் 47 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்களிடம்‌ 47 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.


கோவை: பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டுள்ளார்.

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்களின்‌ தலைமையில்‌ இன்று (17.10.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையாளார்கள்‌ க.சிவகுமார்‌, மரு.ச.செல்வசுரபி ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌ மேயரிடம் மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ 47 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 16 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 3 மனுவும்‌, ஆகமொத்தம்‌ 47 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையா்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி ஆணையர்‌ நிர்வாகம்‌ (பொ) மாணிக்கம்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ சந்தியா, நூார்‌அகமது(பொ), ஜே.பிரேம்‌ஆனந்த்‌, மகேஷ்கனகராஜ்‌, செந்தில்குமரன்‌, செயற்பொறியாளார்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...