வேலம்பட்டியில் விவசாய நிலத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு - அளவீடும் பணி பாதியிலேயே நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டியில் விவசாயி நிலத்தில் அனுமதியின்றி சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: விவசாயின் நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரை சுமார் 33 கிலோமீட்டர் அமைக்கப்பட்டுள்ள NH-381 என்ற தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசிபாளையம் அருகே வேலம்பட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் சுங்கச்சாவடியை இடித்து அகற்றாமலேயே சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து சுங்கம் வசூலிக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள விவசாயி துரைசாமி என்பவர் பேக்கரி ஒன்றையும் நடத்தி வருகிறார். பேக்கரி முன்பு தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க இன்று அளவீட்டுப் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைசாமியையும், அவரது குடும்பத்தாரையும் சுங்கச்சாவடி மேலாளர் சிவசங்கர் என்பவர் மூலம் திட்ட இயக்குனர் செந்தில் என்பவர் தன்னை மிரட்டியதாகவும் தங்களது நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி அளவீட்டு பணிக்காக வந்த அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மீறி அமைத்தால் இப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் தற்காலிக சுங்கச்சாவடி அமைப்பதற்கான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அளவீட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...