வாகன பதிவெண்களை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமிரா தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடரும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வாகன பதிவெண்களை துல்லியமாக காட்டும் அதிநவீன கேமரா தொழில்நுட்பம் கோவையில் நடைமுறைக்கு வந்தது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவில் "அதிநவீன சிசிடிவி கேமரா" தொழில்நுட்பம் தொடர்பான அறிமுக விழா நடைபெற்றது.



இதில், மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் சந்தீஷ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவாணீஷ்வரி, துணை தலைவர் சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இந்த அதிநவீன கேமரா தொடர்பான தகவல்களை விளக்கினார். முதற்கட்டமாக, அரசு அலுவலகங்களை மையப்படுத்தி ரூபாய் 34 லட்சம் மதிப்பில் 110 அதிநவீன கேமரா தொழில்நுட்பம் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.



இந்த கேமரா எவ்வாறு உதவியாக இருக்கும், எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பெரிய திரையில் விளக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



அரசு அலுவலகங்களை மையப்படுத்தி சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பதிவெண்களை தெளிவாக எடுக்கும் வகையிலும், இரவு நேரங்களில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராக்களின் பதிவுகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பாடும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடருதல், குழந்தைகள், வயதானவர்கள் காணாமல் போனால், அவர்களின் உடை மூலம் உடனடியாக கண்டறியவும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதுமட்டுமின்றி முகங்களில் ஏற்கனவே பதிவான குற்றவாளிகளின் முகங்கள் தென்பட்டால் அதையும் ஒரே நேரத்தில் இந்த திரையில் காட்டும் வகையில் தொழில்நுட்பம் உள்ளதாகவும் கூறியவர், அடுத்தக்கட்டமாக 100 கேமராக்கள் அடுத்த ஓராண்டில் பொறுத்த திட்டமிட்டுள்ளாதாகவும், குற்றத்தை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் இந்த கேமராவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றார்.

தற்போது வரை கோவை மாநகர காவல்துறையில் 25,000 கேமராக்களில் 14,800 கேமராக்கள் சாலையை நோக்கி பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த அதிநவீன கேமராக்களின் பதிவுகள் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளும் வசதி கொண்டதாகவும், ஏற்கனவே, சோதனை முயற்சியின் போது 2 வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...