மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேரக் கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்


திருப்பூர்: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மின் நுகர்வோர் தொழில் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

தமிழக அரசின் மின்சார வாரியம் சார்பாக சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் சிறு குறு நிறுவனங்களை இணைத்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என உருவாக்கப்பட்டு அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



இருப்பினும் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றப்படாததன் காரணமாக ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம், தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று திருப்பூரில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பல்லடம் சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை நலிவடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தமிழக அரசு தொழில் துறையினரின் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திலும் திருப்பூரிலிருந்து திரளாக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...