‌திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு - 146 வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள்146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர்: திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 146 வது நாளை எட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறியும், அதேபோல் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகள் உள்ளதாகவும் இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில பாதிக்கப்படுவதோடு, அதன் வரலாறு முற்றிலும் அழிந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



அதன் பாரம்பரியமும், வரலாறும் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று 146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியில் மத்திய தொல்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...