ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை - திருடர்களை அதிரடியாக பிடித்த கோவை காவல்துறை

கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 இடங்களில் செயின் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.


கோவை: கோவையில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை கோவை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

கோவையில் ராம்நகர் பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த பிரசாந்த் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு மர்ம நபர்கள் 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். அச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நாளில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் கோவை மாநகர் மற்றும் மாநகர எல்லை பகுதியில் நடைபெற்றது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட தீவிர விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23), பார்த்தீபன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.



இதையடுத்து அவர்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனம், லேப்டாப், 54 கிராம் எடையுள்ள 3 செயின்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு காட்டூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சந்தீஸ், கடந்த மாதம் 25ம் தேதி தொடர்ச்சியாக 5 இடங்களில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவம் நடைப்பெற்றது. இரண்டு வாகனம் , மற்றும் லேப்டால் திருடப்பட்டு இருந்தது. முகமூடி அணித்து 7 இடங்களில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைப்பெற்று இருந்தது. காட்டூர் காவல் நிலையம், ஆர்.எஸ்.புரம், மதுக்கரை, கோவில்பாளையம், சுந்தராபுரம், சரவணம்பட்டி காவல் எல்லைகளில் திருட்டு மற்றும் வழிப்பறி ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவரகளை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

150 கேமரா சிசிடிவி காட்சிகள் எடுக்கப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தினேஷ், பார்த்திபன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்பட்ட செலவுகளுக்காக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இளம் வயதினர் குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா மற்றும் மது போதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. நம்ம கோவை நம்ம பாதுகாப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகிறோம். 120 கேமரா விரைவில் பொறுத்தப்பட்ட வுள்ளோம். 55 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் வரக்கூடிய வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம். திரைப்பட கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...