ஒப்பந்த ஊழியர் மீது தாக்குதல் - கோவை மாநகராட்சி ஊழியர் வேலை நிறுத்த அறிவிப்பு

சாலை போடும் பணியில் இருந்த ஒப்பந்ததாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.


கோவை: ஊழயர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்

கோவை மாநகராட்சியின் 92வது வார்டு குனியமுத்தூர் காமராஜர் வீதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. பணி நடந்து கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் அங்கே வந்துள்ளார். தனது வீட்டின் அருகே தார் பேட்சி அமைத்து தர வேண்டும் என அவர் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர், ஊழியர்கள் தற்போதைய பணி முடிந்த பின் அந்த இடத்திற்கு வந்து பேட்ச் அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் நாகராஜ் இதனை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் மகனுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் நிறுவன ஊழியர் சவுந்தரராஜ் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது குனியமுத்தூர் போலீசில் புகார் தரப்பட்டது. பணிகள் செய்யும் இடங்களில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டது,

மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்க செயலாளர் சந்திர பிரகாஷ் கூறுகையில், " ஒப்பந்த நிறுவனத்தினரை தாக்கியது சரியான செயல் அல்ல. பணிகளில் குறைபாடு இருந்தால் மாநகராட்சி கமிஷனர் மண்டல அலுவலகம், பொறியாளர்களிடம் புகார் தரலாம். அதை விட்டு விட்டு வேலை செய்யும் நிறுவனத்தினரை தாக்குதல் நடத்த கூடாது. மாநகராட்சி அதிகாரிகள் பணி செய்யும் இடத்திற்கு செல்லும் போது அவர்கள் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்த கூடிய நிலைமை இருக்கிறது. எனவே சட்டப்படி செயல்பட வேண்டும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவே நாளை (6ம் தேதி) மாநகராட்சி பகுதியில் அனைத்து வேலைகளை நிறுத்தி வைக்கப்படும் போர்வெல் இயக்கம் தவிர வேறு பணிகள் நடக்காது. பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன் வரக்கூடாது. அப்படி யாராவது மீறி பணிகள் நடத்தினால் சங்கத்தின் சார்பில் வந்து பணிகளை நிறுத்தி வைக்கப்படும், " என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...