நீர் வெப்ப திரவமாக்கல் உலைக்கு காப்புரிமை - சாதித்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்வெப்ப திரவமாக்கல் கலன் தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளதாக கோவையில் அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: நீர் வெப்ப திரவமாக்கல் உலைக்கு காப்புரிமை பெற்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் விஞ்ஞானிகளான முனைவர் ர.திவ்யபாரதி மற்றும் முனைவர் ப.சுப்பிரமணியன் ஆகியோர்களின் மூலம் நீர்வெப்பதிரவமாக்கல் கலனுக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.



நீர்வெப்ப திரவமாக்கல் அமைப்பானது, கலக்குவான், வெப்பப்படுத்துவான் மற்றும் குளிர்வி ஆகிய பாகங்களைக் கொண்ட உயர் அழுத்தக் கலனாகும். இக்கலனானது, ஈரத்தன்மை அதிகமுள்ள உயிரிக் கழிவுகளிலிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர்வெப்ப திரவமாக்கல் முறையில் கரிமற்றும் நீர்திரவம் ஆகியவை உபபொருளாக கிடைக்கின்றன. உயிரி எண்ணெயை நேரடியாக உலைகளில் எரி பொருளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம். கரியானது, திட உயிரி எரிபொருளாக பயன்படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உபபொருளான நீர்திரவம் அங்கக இரசாயனங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதிலுள்ள இரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...