தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் - பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பல்லடத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் போல் நடைபெறாமல் இருப்பதால்தான் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும்.அதற்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும். மக்களிடத்தில் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகளை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கூட்டணி குறித்து கழக பொதுசெயலாளர் முடிவு செய்வார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் காவல்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் எந்த காவல் நிலையம் பகுதியில் அதிக குற்றங்கள் நிகழ்கிறது என கண்டறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டறிந்து அதன் மூலமாக அப்போதைய முதல்வரிடம் எடுத்துரைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் தற்போது இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் சரியாக நடைபெறததால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்களை பொதுச்செயலாளர் ஆலோசனையின்படி மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பகுதி செயலாளர், உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...