மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (34). இவர் CCTV கேமரா நெட்வொர்க்கிங் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர், தனது வீட்டின் முன்பு மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று உறங்கினார்.






அதிகாலையில் வீட்டின் முன்பு இருந்து வெடி சத்தம் போல் கேட்டது. அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் பைக் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் பெயிண்டரான தமிழ்ச்செல்வன் (34) என்பவரது மோட்டார் பைக்கும் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தகுமார் மோட்டார் பைக்குகளில் பற்றிய தீயை அணைத்தார். எனினும், தீ விபத்தில் இரு மோட்டார் பைக்குகளும் சேதமடைந்தன.




தொடர்ந்து ஆனந்தகுமார் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




இதனிடையே நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த பஞ்சர் கடையில் பணிபுரிந்து வரும் பரத் (23) என்பவரது விலையுயர்ந்த மோட்டார் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்தும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பரத் புகார் அளித்தார். இப்புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக மோட்டார் பைக்குகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தொடர்ந்து ஒரே பகுதியில் அடுத்தடுத்து மோட்டார் பைக்குகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...