கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றது கண்டிபிடிப்பு

கோவை கொடிசியா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரகாந்த் என்பவர் விழுந்து உயிரிழந்த அதே நாளில் அங்கு ஏற்பட்ட பல்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: அனுமதியின்றி தனியார் பள்ளி நிர்வாகம் அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துக்கள் நடத்துள்ளது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை கொடிசியா பகுதியில் உள்ள கீதாஞ்சலி என்ற தனியார் பள்ளி அருகில் அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தால் போடப்பட்ட வேகத்தடையில் வெள்ளை கோடுகளை குறிப்பிடாத காரணத்தினால், கடந்த வெள்ளிகிழமை (29.09.2023) இரவு அவ்வழியாக வந்த சந்திரகாந்த்(26) என்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர். மேலும் அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் வேக தடைகளை யாரும் அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சந்திரகாந்த் விழுவதற்கு முன்பு அதே நாளில்(29.09.2023) அந்த வேகத்தடையால் பல்வேறு வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அவர்களும் வேகத்தடை அங்கு அமைக்கப்பட்டு இருப்பதை உணராமலும் வெள்ளை கோடு இல்லாததால் நிலை தடுமாறி விழுந்தவர்களே ஆவர். தற்பொழுது அவ்விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...