உடுமலை திருமூர்த்தி மலையில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு

உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் அவர்கள் கூறியதாவது திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 2049மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகி பல கிளை ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலைகாடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.



இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே. எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமை ஆகும் என்று கூறினார். உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...