பல கொலைகளை எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார் - கோவையில் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார்.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும் என கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது, முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர்.

கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிச்சாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கின்றார். இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர்.

விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்யமாட்டார். சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.

திமுக ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். கீழ் மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன்.

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஐந்து நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...