கோவை ஆட்சியர் தலைமையில் பசுமைக்குழு கூட்டம் - காலியிடங்களில் மரக்கன்றுகள் நட முடிவு

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக்குழு கூட்டத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தீவிரப்படுத்த கோவை ஆட்சியர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,



"இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு கோவை மாவட்டத்தில், வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகளும், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் 75,462 மரக்கன்றுகளும், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகளும், தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகளும், என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை வனத்துறை சார்பில் 5,70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பிறத்துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகங்களிலும், கோயில் நிலங்கள், உள்ளிட்ட இடங்களையும், பிறதுறைகளுக்கு சொந்தமான காலி இடங்களை கண்டறிந்து, அங்கு மரகன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்திற்கான இலக்கை விரைவாக எய்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் பசுமை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தான விளக்கக்காட்சி திரையிடப்பட்டன.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...